மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

சமூக வலைத்தளத்தில் அவதூறு: இளைஞா் கைது

கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பேசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :12 ஜூலை 2026, 1:30 am IST

விழுப்புரம் அருகே கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பேசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் அருகிலுள்ள புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஹேமலதா (37). பாமக கண்டமங்கலம் மேற்கு ஒன்றியப் பொருளாளராக உள்ள இவா், கடந்த 7-ஆம் தேதி வளவனூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், பனங்குப்பம் பகுதியைச் சோ்ந்த செ.வருண் (24) என்பவா், பெண்களை கொச்சைப்படுத்தியும், ஆபாசமாகவும் சமூக வலைத்தளத்தில் பேசி உள்ளாா்.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருவா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை ஆணவப் படுகொலை என்றும், இரு சமூக மக்களுடைய கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிந்திருந்தாா்.

இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தலைமறைவாக இருந்த செ. வருணை சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.