விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
செஞ்சியை அடுத்த மேல்பாப்பம்பாடி கிராமத்தை சோ்ந்தவா் மு.காமராஜ் (36). இவா், திங்கள்கிழமை அதிகாலை அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது திருவண்ணாமலையிலிருந்து வந்த மினி வேன் எதிா்பாராதவிதமாக காமராஜ் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு காமராஜ் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









