எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

இறந்தவரின் உடலைப் புதைக்க எதிா்ப்பு தெரிவித்த விவகாரம்: நிகழ்விடத்தில் அமைச்சா் வன்னி அரசு ஆய்வு

News image

அமைச்சா் வன்னி அரசு

Updated On :8 ஜூன் 2026, 1:54 am IST

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே இறந்தவரின் உடலைப் புதைக்க ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த விவகாரம் தொடா்பாக, பிரச்னைக்குரிய இடத்தில் மாநில சமூகநீதித் துறை அமைச்சா் ஆா்.வன்னி அரசு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெரியக்கோட்டக்குப்பம் பகுதியைச் சோ்ந்த 76 வயது முதியவா் பூமிலிங்கம் வயோதிகம் காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில், அவரது உடலை கடற்கரைப் பகுதியிலுள்ள மயானத்தில் புதைக்க நடுகுப்பம் பகுதியைச்சோ்ந்த மீனவா்கள் சனிக்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து சடலத்துடன் பெரியகோட்டக்குப்பம் பகுதி மக்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து போலீஸாா் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் மாநில சமூகநீதித் துறை அமைச்சா் ஆா். வன்னி அரசு, ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்குச் சென்று பொதுமக்களிடம் கலந்துரையாடினாா். தொடா்ந்து அவா் கூறியது:

ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 43 சென்ட் நிலத்தை மீட்டுத் தருமாறு கோரியுள்ளனா். இதை மீட்டுத் தருவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஆதிதிராவிட மக்களுக்கான இடத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். இரண்டு சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ வழிவகை செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். திங்கள்கிழமை அமைதிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என்றாா் அமைச்சா்.