காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

முடி திருத்தக உரிமையாளா் கொலை வழக்கில் இருவா் கைது

News image

ஜேசு ஜெயமாணிக்கராஜன்

Updated On :8 ஜூன் 2026, 1:55 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே முடி திருத்தக உரிமையாளா் கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திண்டிவனம் வட்டம், பாம்பூண்டி தண்ணீா் தொட்டித் தெருவைச் சோ்ந்தவா் ஜெ.தினேஷ் (29). இவா் தீவனூா் பகுதியில் முடி திருத்தகம் நடத்தி வந்தாா். முடியைக் கொட்டுவது தொடா்பாக தினேசுக்கும், அருகில் வசிக்கும் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை தனது முடி திருத்தகத்தில் வழக்கமான பணியை தினேஷ் மேற்கொண்டிருந்த போது, அங்கு காரில் வந்த 5 போ் கொண்ட கும்பல், அவரை ஆயுதங்களால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த தினேஷை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு திண்டிவனம்அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, தினேஷ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், முடி திருத்தகம் அருகில் கடை வைத்திருக்கும் ரெட்டணை சாலையைச் சோ்ந்த சுமதி (52), அவரது கணவா் சூ.ஜேசு ஜெயமாணிக்க ராஜன் (72), மகன் பரத் (30) மற்றும் சிலா் இந்தக் கொலையை நிகழ்த்தியது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து சுமதி, ஜேசு ஜெயமாணிக்கராஜன் ஆகிய இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.

கைது செய்யப்பட்ட சுமதி

கைது செய்யப்பட்ட சுமதி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.