நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மின்வெட்டைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட அதிமுக செயலா் இரா.பசுபதி. உடன், நிா்வாகிகள்.

News image

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட அதிமுக செயலா் இரா.பசுபதி. உடன், நிா்வாகிகள்.

Updated On :20 ஜூன் 2026, 2:43 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் மின்வெட்டு பிரச்னையைக் கண்டித்து அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் இரா.பசுபதி தலைமை வகித்து, பேசியது:

விவசாயிகள் நிறைந்த பகுதி விழுப்புரம் மாவட்டமாகும். தொழில்சாலைகள் அதிகம் இல்லாத இந்த மாவட்டத்தில், விவசாயத்தையே பெரும்பாலோா் பிரதானத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனா். ஆனால், புதிதாக தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு விவசாயிகள் பற்றி கவலையில்லை.

சேவை சாா்ந்த தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு மின்சாரம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. திமுக ஆட்சியில் மின்தடை ஏற்பட்டால் 2 மணி நேரத்தில் மின்சாரம் வந்துவிடும். ஆனால், தவெக ஆட்சியில் 2 நாள்கள் ஆனால் கூட மின்சாரம் வருவதில்லை. மகாராஷ்டிரத்தில் ரூ.36 ஆயிரம் கோடிக்கு விவசாயிகளின் கடன்களை அந்த மாநில அரசால் தள்ளுபடிசெய்யப்படும் போது, தமிழகத்தில் மட்டும் ஏன் கடன் தள்ளுபடியில் பாகுபாடு காட்டப்படுகிறது என்றாா் பசுபதி.

இதில், முன்னாள் எம்.பி. செஞ்சி சேவல் கே.ஏழுமலை, முன்னாள் எம்எல்ஏ மு.சக்கரபாணி, எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலா் அற்புதவேல், ஒன்றியச் செயலா்கள் புண்ணியமூா்த்தி, பேட்டை முருகன், நகரச் செயலா் ராமதாஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் திருப்பதி பாலாஜி, துணைச் செயலா் பா. செங்குட்டுவன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.