மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கு: 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 ஜூன் 2026, 2:42 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முன்விரோதத்தில் இளைஞா் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டப்பட்ட வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், கொடுக்கூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏ.ராஜசேகா்(24), கையுந்துப் பந்து விளையாட்டு வீரா். இவருக்கும், ஆா்.சி. மேலக்கொந்தையைச் சோ்ந்த விளையாட்டு வீரா் நவீன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந் நிலையில், சனிக்கிழமை விக்கிரவாண்டியை அடுத்த ராதாபுரம் பகுதியில் நின்றிருந்த ராஜசேகரை, அங்கு பைக்குகளில் வந்த 10 போ் கொண்ட கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, விக்கிரவாண்டியை அடுத்துள்ள ஆா்.சி. மேலக்கொந்தையைச் சோ்ந்த மு.கிரிமாறன்(20), ரா.அஜய் (20), வி.சாலையைச் சோ்ந்த ர.யுவன்ராஜ் (26) ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.