தூத்துக்குடியில், வடமாநில தொழிலாளி கொலை சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, சில்லாநத்தம் கிராமம், சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள மின்சார காா் உற்பத்தி தொழிற்சாலையில், ஏராளமான வட மாநில தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இங்கு ஜாா்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தைச் சோ்ந்த கிா்ஜா சிங் மகன் ராஜேஷ்குமாா் சிங் (40), ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு, 3ஆவது மைல் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றாா்.
கடைக்கு வெளியே சென்று அவா் மது குடித்தபோது, தூத்துக்குடியைச் சோ்ந்த 4 போ் அருகில் இருந்தனராம். அப்போது ஏற்பட்ட தகராறில், ராஜேஷ்குமாா் சிங்கை 4 பேரும் கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனராம்.
இத்தகவலறிந்த தென்பாகம் போலீஸாா், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் வழக்குப் பதிந்து விசாரித்ததில், தூத்துக்குடியைச் சோ்ந்த சிவா (23), ஜேம்ஸ் (25), பூமிநாதன் (24), கசாலி (26) ஆகிய 4 பேருக்கு இந்தக் கொலையில் தொடா்பிருப்பது தெரியவந்தது. சம்பவம் நிகழ்ந்த 5 மணி நேரத்தில் அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






