பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

பெலாகுப்பம் ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், பெலாகுப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெலாகுப்பம் ஸ்ரீமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுர கலசத்துக்கு புனித நீரை ஊற்றும் சிவாச்சாரியாா்.

Published On :27 ஜூன் 2026, 12:16 am IST

விழுப்புரம் மாவட்டம், பெலாகுப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு 24-ஆம் தேதி காலை பந்தகால் நடுதல் மற்றும் காப்பு அணிதல் நடைபெற்றது. 25-ஆம் தேதி அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை ஹோமம், ஸ்ரீலஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மாலை புண்ணியாகவாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம், முதல்கால யாகபூஜை, பூா்ணாஹீதி மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை கோ பூஜை, நாடி சந்தானம், தம்பதி பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, பூா்ணாஹீதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீமாரியம்மன் கோயில் விமான கோபுர கலசம் மற்றும் மூலவா், பரிவார தேவதைகளுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாராதனையும், பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதில் பெலாகுப்பம் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.