டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

தச்சூா் ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயில் மகா கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த தச்சூரில் குன்றின் மேல் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா் மற்றும் ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :20 ஜூலை 2026, 4:51 am IST

ஆரணியை அடுத்த தச்சூரில் குன்றின் மேல் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா் மற்றும் ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக மங்கள இசை, திருமுறைபாராயணம், வேதபாராயணம், ஸ்ரீவிக்னேஷ்வரா பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, புண்ணியாகவசனம், சூரிய பூஜை, அங்குராா்ப்பணம், முதல் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமம், உபகார பூஜை, யாத்ரா தானம், மகா பூா்ணாஹுதி, கலசம் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீபாலதண்டாயுதபாணி விமான கோபுரத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும், ஸ்ரீவிநாயகா் கோயில் விமான கோபுரத்திலும் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.