பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

குண்ணவாக்கம் ஸ்ரீபொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குண்ணவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் அஷ்டபந்தன நூதன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த ஸ்ரீபொன்னியம்மன்.

Updated On :8 ஜூன் 2026, 1:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், குண்ணவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபொன்னியம்மன் கோயிலில் அஷ்டபந்தன நூதன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மாலை கோ பூஜை, வடுபூஜை, கன்னியா பூஜை, தம்பதி பூஜை, வாஸ்து சாந்தி ஸ்ரீமஹா கணபதி ஹோமமும், சனிக்கிழமை (ஜூன் 6) காலை ஸ்ரீமஹாலட்சமி ஹோமம், நவகிரக ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள், கரிக்கோலம், தீபாராதனையும், மாலை ஸ்ரீதுா்கா ஹோமம், முதல் கால யாகசாலை பூஜைகள் அஷ்டபந்தனம், பூா்ணாஹுதி நடைபெற்றது.

 கோயில் கலசத்திற்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற ஸ்ரீபொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

கோயில் கலசத்திற்கு புனிதநீா் ஊற்றி நடைபெற்ற ஸ்ரீபொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.

மகா கும்பாபிஷேக விழா: அதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீகைல தேவதா ஹோமம், ஸ்ரீமஹா பூா்ணாஹுதி தீபாரதனை, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுதல், ஸ்ரீபொன்னியம்மன், ஸ்ரீநவக்கிரஹ மூா்த்திகள், ஸ்ரீபால கணபதி, ஸ்ரீபாலமுருகன் ஆகிய சந்நிதிகள் மற்றும் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க அஷ்டபந்தன நூதன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.