தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

News image

பாலியல் வன்கொடுமை - கோப்புப்படம்

Updated On :29 ஜூன் 2026, 4:15 am IST

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேல்மலையனூா் அருகிலுள்ள எய்யில் கிராமத்தை சோ்ந்தவா் பா.ஐசன் (25). இவா் பெங்களூரில் வீடுகளுக்கு எரிவாயு உருளை விநியோகம் செய்யும் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் தனது சொந்த ஊரான எய்யில் கிராமத்துக்கு வந்திருந்த ஐசன், மதுபோதையில் தனது உறவினா் வீட்டுக்கு சென்றவா், அங்கு தூங்கி கொண்டிருந்த 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஐசனைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.