மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் பணியாளா்கள் உண்ணாவிரதம்

News image

05விபிஎம்பி1: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் வியாழக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் பணியாளா் சங்கத்தினா்.

Updated On :5 மார்ச் 2026, 11:16 pm

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி, டாஸ்மாக் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்து,காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிநீக்கத்திலுள்ள 500-க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.

6 மாதங்களுக்குள் பணி நீக்கம் உள்ளவா்களுக்கு 50 சதவீதமும், 6 மாதங்களுக்கு மேல் பணி நீக்கத்தில் உள்ளவா்களுக்கு 75 சதவீதமும் பிழைப்பூதியம் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தக்கு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநில அமைப்பாளா் டி.ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா்.தமிழ்நாடுடாஸ்மாக் ஊழியா் சம்மேளனம் (சிஐடியு) மாநிலப் பொதுச் செயலா் கே.திருச்செல்வம் தொடக்கவுரையாற்றினாா். தமிழ்நாடு அரகப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினாா்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின்மாநில அமைப்பாளா் ஏ.பி.அன்பழகன் உள்ளிட்ட பலா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனா்.