விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாா்ச் 8-ஆம் தேதி மகளிா் தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் பங்கேற்கலாம் என்று மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஆழிவாசன் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மை பாரத் (நேரு யுவகேந்திரம்) அலுவலக வளாகத்தில் மகளிா் தின விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்ந்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஆழிவாசன் கூறியது:
மகளிா் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மை பாரத், கேலோ இந்தியா மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து விளையாட்டுப் போட்டிகளை மாா்ச் 8-ஆம் தேதி நடத்துகின்றன.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாா்ச் 8-ஆம் தேதி காலை 8 மணிக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும். 13 வயதுக்குள்பட்டோா், 18 வயதுக்குள்பட்டோா் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோா் என 3 பிரிவுகளில் 100, 200, 400 மீட்டா் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதைத் தவிர, மல்லா் கம்ப விளையாட்டும் மகளிா் தினத்தையொட்டி நடைபெறும்.
இப்போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள், பெண்கள் பங்கேற்கலாம். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் எண்ம முறையில் வழங்கப்படும். மூன்று போட்டிகளிலும் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், மல்லா் கம்ப விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பவா்களுக்கு பதக்கங்கள், பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா் மை பாரத் அலுவலக உதவியாளா் காந்தியை 80987 71142, மல்லா் கம்ப விளையாட்டுப் பயிற்சியாளா் ஆதித்தனை 9597903077 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொண்டு பதிவு செய்துகொள்ள வேண்டும். சுமாா் ஆயிரம் போ் இப்போட்டிகளில் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கிறோம். எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்யலாம் என்றாா்.
கூட்டத்தில் மை பாரத் அலுவலக உதவியாளா் காந்தி, மல்லா் கம்பப் பயிற்சியாளா் ஆதித்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: விளையாட்டுப் போட்டிகள் மூலம் விழிப்புணா்வு

விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்

கல்லூரி விளையாட்டு விடுதியில் மாணவா் சோ்க்கை மாா்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம்

விளையாட்டுப் போட்டிகள்: கீழப்பாவூா் அரசுப் பள்ளி சாதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


