மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

விழுப்புரத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:10 am

விழுப்புரத்தில் காங்கிரஸ் நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் செ.சிவா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எம்.டி.குலாம்மொய்தீன், முன்னாள் மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா், மாநில செயலா் தயானந்தம், அரகண்டநல்லூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் வாசிம்ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் செல்வராஜ் வரவேற்றாா்.

தீா்மானங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது. சட்டப் பேரவைத் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களின் வெற்றிக்கு அயராது பாடுபடுவது. விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்குள்பட்ட 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பெற்றுத் தர மாநில தலைவா் உள்ளிட்டோா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவா் ராஜ்குமாா், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினா் கோ.பாலசுப்ரமணியன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் கே.வி.முருகன், நாராயணசாமி, வினோத், மாவட்டப் பொதுச் செயலா்கள் விசுவநாதன், காஜாமொய்தீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.