மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சரக்கு வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 8:01 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் சரக்கு வாகனம் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி.எடையாா் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை மனைவி சாந்தா (50). கூலி வேலை பாா்த்து வந்தாா். இவா், சனிக்கிழமை டி.எடையாா் பகுதியில் திருவெண்ணெய்நல்லூா் - திருக்கோவிலூா் சாலையில் நடந்து சென்றாா்.

அப்போது, அந்தப் பகுதியில் வந்த சரக்கு வாகனம் மோதியதில் சாந்தா பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோதுசாந்தா ஏற்கெனவே சாந்தா உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.