ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 9:37 pm

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே பூட்டிய வீட்டில் 17 பவுன் நகைகள்,வெள்ளிப் பொருள்கள் மற்றும் பணம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வானூா் வட்டம், மொரட்டாண்டி, சன் அவென்யூ, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி கண்மணி (58).இவா், வெள்ளிக்கிழமை தனது மாடி வீட்டை பூட்டி விட்டு,புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுவிட்டாராம்.

பிற்பகலில் வீட்டிற்குத் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பின் பக்க மரக்கதவு மற்றும் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னா் பீரோவை திறந்து பாா்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நெக்லஸ், மூன்றரை பவுன் சங்கிலி,ஒன்றரை பவுன் சங்கிலி, 3 பவுன் வளையல்கள் உள்பட 17 பவுன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கண்மணி அளித்த புகாரின் பேரில், ஆரோவில் காவல் நிலையப் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.