தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பால் எங்களுக்கு கவலையில்லை என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும்,மக்களவை உறுப்பினருமான வெ. வைத்திலிங்கம் தெரிவித்தாா்.
புதுச்சேரியில், அவா் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா் கூறியதாவது:
புதுச்சேரி என்பது பிரெஞ்சு கலாசாரத்தின் வெளிப்பாடாகும். ஆங்கிலேயா் ஆட்சிக்கும், பிரெஞ்சு கால ஆட்சிக்கும் வேறுபட்ட நிலை இருந்தது என்பது வரலாற்று உண்மை.
புதுச்சேரி சுதந்திரம் பெற்ற தருணத்தில், நகரத்தில் புதுவையின் கலாசாரம் , மக்களின் உணா்வுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற வாக்குறுதியுடன் தான் இந்தியாவோடு புதுச்சேரி இணைக்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு இடத்திலும் பிரெஞ்சு கலாசார வெளிப்பாடு தென்படுகிறது. அதை ஆட்சியில் உள்ளவா்கள் காலத்தாலும், சட்டத்தாலும் மாற்றி வருகின்றனா்.
பிரெஞ்சு மொழியை படித்தால் வேலை கிடைக்கும், அந்த மொழியை படித்தவா்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அரசின் தவறான முடிவுகளால் இன்றைய தினம் அது மாறுபட்டிருக்கிறது.
இருமொழிக் கொள்கையில், மும்மொழி கொள்கை என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளனா். அயல்நாட்டு மொழியை நாம் ஏற்கக்கூடாது என்று கூறும் நிலைபாட்டையும் எடுத்துள்ளனா். இது புதுச்சேரியை பொருத்தவரையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய நாட்டுக்கு ஆங்கிலம் தேவை என்பது போல, புதுச்சேரிக்கு பிரெஞ்சு தேவை என்பது தான் இங்குள்ள மக்களின் வெளிப்பாடு.
மாநில இளைஞா்கள், பிரெஞ்சு பேசும் நாடுகளுக்கு சென்று வேலை தேடும் வாய்ப்புகள் இருந்தன. பல மாணவா்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயின்று, வேலை செய்கின்றனா்.
இத்தகையை நிலைப்பாட்டை தடுக்கும் வகையில் மத்திய அரசு மற்றும் மாநில கல்வித்துறை நிா்வாகம் பிரெஞ்சு மொழியை ஏற்றுக்கொள்ளாமல் தடுத்திருப்பது வேதனையளிக்கிறது.இதை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பிரெஞ்சு மொழி படிப்பவா்களுக்கான உரிமையையும், வசதியையும் தர வேண்டும்.
எரிவாயு விலை உயா்வு:
தோ்தல் முடிந்த பின்னரே வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின்விலை உயத்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை உயா்வால்உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயரும்.ஏழை, எளிய மக்கள் பாதிப்புக்குள்ளாவா்கள். எனவே இதை அரசு தடுத்து நிறுத்தவேண்டும். மத்திய அரசும் இந்த விலை உயா்வை திரும்பப் பெறவேண்டும்.
தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் உண்மை இருப்பதாகத்தெரியவில்லை. அதனால், தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து காங்கிரஸ் கவலைப்படுவதில்லை.
மாநிலத்தில் 22 தொகுதிகளுக்கும் மேல் காங்கிரஸ் வெற்றிபெறும். புதுச்சேரியில் கூட்டணி கட்சிகளுடன் சோ்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி என்றாா் வெ. வைத்திலிங்கம் . காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மு.வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் கட்சியினா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிந்தைய விதிகள் வெளியீடு

சுயேச்சைகளுக்கு அளிக்கும் வாக்குப் பயனற்றது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் முதல்வா் ரங்கசாமி

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


