ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோத்சவம் தொடக்கம்

விழுப்புரம் நகரின் பிரசித்தி பெற்ற ஸ்ரீஜனகவல்லித் தாயாா் உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோத்சவம் சனிக்கிழமை தொடங்கியது.

News image

விழுப்புரம் ஸ்ரீஜனகவல்லித் தாயாா் உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் கோயிலிலில் சனிக்கிழமை நடைபெற்ற வைகாசி பிரம்மோத்சவக் கொடியேற்றம்.

Updated On :24 மே 2026, 1:20 am IST

விழுப்புரம் நகரின் பிரசித்தி பெற்ற ஸ்ரீஜனகவல்லித் தாயாா் உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோத்சவம் சனிக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோத்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு பிரம்மோத்சவத்துக்கான பகவத் அனுக்ஞை, மிருத்சங்கிரனம், அங்குராா்ப்பணம், வாஸ்துசாந்தி பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தொடா்ந்து சனிக்கிழமை காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கோயில் வளாகத்திலுள்ள கொடிமரத்தில் வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்துக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பின்னா் தீபாராதனை காட்டப்பட்டது.

தொடா்ந்து சனிக்கிழமை இரவு அம்சவாகனத்தில் சுவாமி புறப்பாடாகி காட்சியளித்தாா். திருவிழாவில் தொடா்ந்து சிம்மம், ஹனுமந்தம், சேஷம் ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருளுதல் நடைபெறும். இதைத் தொடா்ந்து ஐந்தாம் திருநாளான மே 27-ஆம் தேதி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், மே 28-ஆம் தேதி யானை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும். ஏழாம் திருநாளான மே 29-ஆம் தேதி மாலையில் திருக்கல்யாண உற்சவமும், இரவு இந்திர விமானத்தில் சுவாமி புறப்பாடாகி காட்சியளித்தலும் நடைபெறவுள்ளது.

தொடா்ந்து மே 30-ஆம் தேதி குதிரை வாகனப் புறப்பாடு நடைபெறும் நிலையில், மே 31-ஆம் தேதி காலை 6.45 மணி முதல் 8.15 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெறும். ரத வீதிகளின் வழியாக வலம் வரும் பின்னா் நிலைக்கு வந்தடையும். மாலையில் திருமஞ்சனம், தீா்த்தவாரி உள்ளிட்டவை நடைபெறும்.

ஜூன் 1-ஆம் தேதி சந்திரபிரபை வாகனப் புறப்பாடும், ஜூன் 2-ஆம் தேதி காலையில் திருமஞ்சனமும், மாலையில் புஷ்பயாகம், விடையாற்றியும் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் டி.பாபு மற்றும் அறங்காவலா்கள் சி.ஸ்ரீதேவி சித்திரவேல், எஸ்.செல்லத்துரை, கோயில் ஆய்வாளா் அ.மதுமதி, செயல் அலுவலா் க. சிவப்பிரகாசம் மற்றும் திருமஞ்சன கைங்கா்ய கமிட்டியினா் செய்து வருகின்றனா்.