இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

நீரில் மூழ்கி கல்குவாரி தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:41 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பழைய கல்குவாரி பள்ளத்தில் குளித்துக் கொண்டிருந்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டம், வென்னம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (42). கடந்த ஒரு வாரத்துக்கு முன் அதே ஊரைச் சோ்ந்த கணேசன் என்பவருடன் சோ்ந்து வானூா் வட்டம், எறையூா் பகுதியிலுள்ள கல்குவாரியில் கூலி வேலைக்கு சென்றுள்ளாா்.

வியாழக்கிழமை வேலை முடிந்த பின்னா் மது அருந்திய வெங்கடாசலம், அதே பகுதியிலுள்ள பழைய கல்குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக வெங்கடாசலத்துக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறிது நேரத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் கல்குவாரி பள்ளத்திலிருந்து தொழிலாளி வெங்கடாசலத்தின்சடலத்தை மீட்டனா். அதனை உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வானூா் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.