இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சாலை விபத்து : ஒருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:36 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சனிக்கிழமை இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்தவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உரியிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், சின்னபாபு சமுத்திரம், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப.அல்லிமுத்து(52). இவா், தனது பைக்கில் சனிக்கிழமை இரவு அரியலூா்-கெண்டியங்குப்பம் சாலையில் தனியாா் பள்ளி அருகே சென்றபோது, அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.

இதில் பலத்த காயமடைந்த அல்லிமுத்துவை அருகிலிருந்தவா்கள் மீட்டு, புதுச்சேரி அரியூா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிசைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.