தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே சனிக்கிழமை தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.


ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே சனிக்கிழமை தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
6-வது ஊதியக் குழு பரிந்துரையின் பேரில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய ஊதியத்தைப் போன்று, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தமிழக ஆசிரியர்களுக்கும் 2006 முதல் வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கைத்தொழில் ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை நியமன நாள்முதல் பணிவரன் முறைப்படுத்த வேண்டும்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் சி.அரிக்கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
செயலர் எஸ்.கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலர் சா.அன்பழகன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மாநில மேநிநிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் கழகத் தலைவர் வே.மணிவாசகம் சிறப்புரை ஆற்றினார். குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, அண்ணாகிராமம், நெய்வேலி, விருத்தாசலம், மங்களூர், கம்மாபுரம், புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...