ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருட்டு
சிதம்பரம் சிவஜோதிநகர் திலகர்சாலையைச் சேர்ந்த வாகீசன் (63). இவர் வெள்ளிக்கிழமை சிதம்பரத்தில் உள்ள வங்கிக்கு சென்று ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை எடுத்தார். பின்னர்


சிதம்பரம் மேலரதவீதியில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடு போனது.
சிதம்பரம் சிவஜோதிநகர் திலகர்சாலையைச் சேர்ந்த வாகீசன் (63). இவர் வெள்ளிக்கிழமை சிதம்பரத்தில் உள்ள வங்கிக்கு சென்று ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை எடுத்தார். பின்னர் ரொக்கம், வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழே வைத்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு மேலரதவீதியில் சாலையோரம் நிறுத்திவிட்டு மருந்துகடைக்கு சென்றார். மருந்து வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டர் இருக்கையின் அடியில் வைத்திருந்த பணம் மற்றும் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு ஆகியவை திருடுபோனது தெரியவந்து அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து புகாரின் பேரில் நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...