ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

அண்ணாமலைப் பல்கலை.யில் 2 பேர் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம்

ிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் ஆகிய இருவர், வேறு மாநிலங்களில் உள்ள படிப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :13 மே 2013, 12:26 am IST

ிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் ஆகிய இருவர், வேறு மாநிலங்களில் உள்ள படிப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் ஆகிய இருவர், வேறு மாநிலங்களில் உள்ள படிப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றிய செந்தில், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள தொலைதூரக் கல்வி இயக்ககப் படிப்பு மையத்துக்கும், தொலைதூரக் கல்வி மையத்தில் உதவிப் பேராசிரியராக இருந்த முருகையன், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள படிப்பு மையத்துக்கும் இடமாற்றம் செய்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கண்ட இருவரும் முன்பு இருந்த நிர்வாகத்தில் மாணவர்கள் அனுமதிச் சேர்க்கை, ஆசிரியர் - ஊழியர் பணி நியமனங்கள் பெற்றுத் தந்ததாக கூறப்பட்ட புகாரை அடுத்து இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இன்று படிப்பு மைய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள படிப்பு மையங்களின் பொறுப்பு அதிகாரிகள் 28 பேருக்கு திங்கள்கிழமை பல்கலைக்கழக செனட் ஹாலில் நடைபெறும் கூட்டத்துக்கு வருமாறு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா அழைப்பு விடுத்துள்ளார்.

எதற்காக அழைத்துள்ளார்? என்ற காரணம் தெரியாததால் தனிஅலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.