எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அண்ணாமலைப் பல்கலை.யில் 2 பேர் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் ஆகிய இருவர், வேறு மாநிலங்களில் உள்ள படிப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :13 மே 2013, 12:48 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் உதவிப் பேராசிரியர் ஆகிய இருவர், வேறு மாநிலங்களில் உள்ள படிப்பு மையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றிய செந்தில், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள தொலைதூரக் கல்வி இயக்ககப் படிப்பு மையத்துக்கும், தொலைதூரக் கல்வி மையத்தில் உதவிப் பேராசிரியராக இருந்த முருகையன், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள படிப்பு மையத்துக்கும் இடமாற்றம் செய்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கண்ட இருவரும் முன்பு இருந்த நிர்வாகத்தில் மாணவர்கள் அனுமதிச் சேர்க்கை, ஆசிரியர் - ஊழியர் பணி நியமனங்கள் பெற்றுத் தந்ததாக கூறப்பட்ட புகாரை அடுத்து இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இன்று படிப்பு மைய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள படிப்பு மையங்களின் பொறுப்பு அதிகாரிகள் 28 பேருக்கு திங்கள்கிழமை பல்கலைக்கழக செனட் ஹாலில் நடைபெறும் கூட்டத்துக்கு வருமாறு பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா அழைப்பு விடுத்துள்ளார்.

எதற்காக அழைத்துள்ளார்? என்ற காரணம் தெரியாததால் தனிஅலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.