நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மின்அழுத்தம்: பொதுமக்கள், வியாபாரிகள் அவதி

சிதம்பரம் நகரில் மின்வெட்டுடன், குறைந்த மின்அழுத்தம் சேர்ந்துள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Updated On :13 மே 2013, 12:44 am IST

சிதம்பரம் நகரில் மின்வெட்டுடன், குறைந்த மின்அழுத்தம் சேர்ந்துள்ளதால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சில தினங்களாக காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைப்பதால் சிதம்பரம் நகரில் இரவு நேரங்களில் மின்வெட்டு செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

12 மணி நேரம் மின்வெட்டு தற்போது 6 மணி நேரமாக குறைந்துள்ளது. இருப்பினும் கடந்த சில தினங்களாக குறைந்த மின்அழுத்தத்தால் டியூப்லைட்டுகள் எரிவதில்லை. பல இடங்களில் டியூப்லைட் பியூஸ் போய்விடுகிறது. குறைந்த மின்அழுத்தத்தால் மின்விசிறியின் காயில் புகைந்து விடுவதாகக் கூறப்படுகிறது.  ஏற்கெனவே மின்வெட்டை அனுபவித்து வரும் சிதம்பரம் நகர மக்களும், வியாபாரிகளும் குறைந்த மின்அழுத்தத்தால் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து மின்வாரிய அதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்ட போது "காற்றாலை மின்சாரம் தற்போது வழங்கப்படுவதால் குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் சீரமைக்கப்படும்' என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.