சிதம்பரம் வட்டத்தில் 1422 பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற மே 15-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.
வருவாய் தீர்வாயத்தில் உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன் பங்கேற்று மனுக்களைப் பெறுகிறார்.
இது குறித்து சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா தெரிவித்தது: மனு அளிக்க விரும்பும் கிராம மக்கள் தங்களது குறைகளை குறிப்பிட்டு, மனுவின் நகலை வருவாய் தீர்வாயம் நடத்தப்படும் நாட்களுக்கு முன்பாகவே உதவிஆட்சியர் அல்லது சிதம்பரம் வருவாய் வட்டாட்சியருக்கோ மனுக்களை அனுப்பலாம்.
மேற்படி மனுவின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு வருவாய் தீர்வாய நாள்களில் உரிய உத்தரவுப் பிறப்பிக்கப்படும்.
அப்படி அனுப்பப்படும் மனுக்களின் தலைப்பில் வருவாய் தீர்வாயத்துக்கான மனு என்ற விவரத்தை தவறாமல் எழுத வேண்டும். இல்லையென்றால் அந்த மனு வருவாய் தீர்வாயத்துக்காக கொடுக்கப்படும் மனுவாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
1422 பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெறும் கிராமங்கள் விவரம் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலக விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது என வட்டாட்சியர் எம்.விஜயா
தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவோம்: இந்தியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!

சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் முறை விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


