சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

கட்சியினர் தேர்தலுக்குத் தயாராக வேண்டும்: தொல்.திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தேர்தலை சந்திக்க தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Updated On :

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தேர்தலை சந்திக்க தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா குழு சார்பில் அம்பேத்கர் முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சிலையைத் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நெல்லிக்குப்பம்-வான்பாக்கம் சாலை புறாக்குளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் சி.வே.கெய்க்வாட்பாபு, நிர்வாகிகள் கபிலன், மகேந்திரன், மீனாசுந்தரம், குருமூர்த்தி, விடுதலை புலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தென் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்ற கட்சியாக உள்ளது. விஷ்ணுபிரியா, கோகுல்ராஜ் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி கடலூரில் வரும் 28-ம் தேதி என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட காவல் துறையே, காவல் துறையைப் பற்றி விசாரிக்கும்போது உண்மை வெளிவர வாய்ப்பில்லை. எனவே தான் சிபிஐ விசாரணை கோருகிறோம். மது ஒழிப்புப் பிரசாரத்தை கடந்த 17-ம் தேதி தொடங்கி அக்.2-ம் தேதி வரை நடத்த உள்ளோம். மேலும் மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம் என்ற வாசகத்தை முன்னிலைப்படுத்தி கிராமங்கள் தோறும் சென்று நிர்வாகிகள் துண்டு பிரசுரம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும். மதுவிலக்கு கொள்கையை தேசிய கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றனர். நாமும் தேர்தலுக்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இதில் மாநில பொதுச்செயலர் சிந்தனைசெல்வன், துணைப் பொதுச்செயலர் தி.ச.திருமார்பன், மாவட்டச் செயலர்கள் தயா.தமிழ்அன்பன், செல்லப்பன், மாவட்டப் பொருளர் மன்னர்நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலர் மு ல்லைவேந்தன் வரவேற்க, புலிக்கொடியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.