கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

தொழிலாளி வீட்டில் திருட்டு

கடலூர் அருகே படகு கட்டும் தொழிலாளி வீட்டை உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Updated On :

கடலூர் அருகே படகு கட்டும் தொழிலாளி வீட்டை உடைத்து பணம் மற்றும் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் ராஜா (41), அவரது தம்பி ஆனந்தன் (38). இருவரும் படகு கட்டும் தொழில் செய்து வருகின்றனர். வியாழக்கிழமையன்று ஆனந்தன் சீர்காழி அருகே பழையாறில் நடைபெற்ற கோயில் விழாவுக்காக குடும்பத்துடன் சென்றார்.

வெள்ளிக்கிழமை காலையில் ராஜாவின் மனைவி வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, ஆனந்தனின் வீடு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ராஜா கடலூர் முதுநகர் போலீஸில் புகார் செய்தார்.

தகவலறிந்த ஆனந்தனும் பழையாறில் இருந்து ஊர் திரும்பினார்.

முன்னதாக வியாழக்கிழமை இரவு வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் முன்பக்க கதவை திறந்துள்ளனர். பின்னர், வீட்டுக்குள் இருந்த 3 பீரோக்களையும் உடைத்து, அதிலிருந்த 4 சவரன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முதுநகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.