
பண்ருட்டி அருகே விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவி, விஷப் பூச்சி கடித்ததில் புதன்கிழமை இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. கூலித் தொழிலாளி. இவரது மகள் வாசுகி (14), பண்ருட்டி அடுத்துள்ள சேமக்கோட்டை ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்காக அரசு விடுதியில் தங்கியிருந்தார். புதன்கிழமை மாலை விடுதியில் தங்கியிருந்தபோது அவரை விஷப் பூச்சி கடித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மயங்கி விழுந்த வாசுகி, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு தீவிர சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு வாசுகி உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



