வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 வங்கிகளின் தலைமை அலுவலகத்திலிருந்து கிளை அலுவலகங்களுக்கு பணத்தைப் பட்டுவாடா செய்யும் பொறுப்பைத் தனியாருக்கு அவுட் சோர்சிங் விடுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 இந்த நடைமுறையானது தற்போது கடலூர் மாவட்டத்திலுள்ள இந்தியன் வங்கி நிர்வாகத்தால் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.
 இதை எதிர்த்து கடலூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் கே.முருகேசன் தலைமை வகித்தார். ஓய்வூதியர்கள் சங்கத் தலைவர் கே.திருமலை முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உதவிச் செயலர் ஆர்.குருபிரசாத், மாவட்ட வங்கி ஊழியர் சங்க உதவித்தலைவர் வி.ரமணி, பொதுச்செயலாளர் எஸ்.ஸ்ரீதரன், வட்ட வங்கி ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.ராமதாஸ் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
 ஆர்ப்பாட்டத்தின் போது, இந்தியன் வங்கி தொடங்கப்பட்டு, 110 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணம் வழங்கும் முறையைத் தனியாருக்கு மாற்றுவதால் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும். எனவே, இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு பழையை முறையையே நடைமுறைப்படுத்த வேண்டும்.
 மேலும், ஆதார் பதிவு, திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இந்தியன் வங்கிக் கிளையில் மையத்தை உருவாக்கி, அந்தப் பணிகளையும் ஊழியர்களே மேற்கொள்ள நிர்ப்பந்திப்பதைக் கைவிட வேண்டும்.
 ஊழியர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி விருப்ப மாற்றுதலை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் வட்ட பொதுச் செயலர் எஸ்.மீரா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com