மழைப் பாதிப்பு: குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ. ஆய்வு

குறிஞ்சிப்பாடி தொகுதியில் மழைப் பாதிப்புக்குள்ளான பகுதிகளை எம்எல்ஏ. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Published on

குறிஞ்சிப்பாடி தொகுதியில் மழைப் பாதிப்புக்குள்ளான பகுதிகளை எம்எல்ஏ. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உள்பட்ட கல்குணம், பூதாம்பாடி, மேலப்புதுப்பேட்டை, ஆடூர்அகரம், சிறுபாளையூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்தப் பகுதிகளை முன்னாள் அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத்  தொகுதி உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, கல்குணம் செங்கால் ஓடையின் கரைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளதைப் பார்வையிட்டார்.  பின்னர், மேலப்புதுப்பேட்டை கிராமத்துக்கு வந்தபோது,  நியாய விலைக் கடையில் இருந்த பெண்கள் சர்க்கரை விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ.விடம் புகார் தெரிவித்தனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலர் சிவக்குமார், பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாயி அணியின் துணை அமைப்பாளர் சிறுபாளையூர் கோபு, பேரூர் செயலர் செங்கல்வராயன், அவைத் தலைவர்கள் திருநீலம், ராமர், மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன்,  ராமச்சந்திரன், பொருளாளர் சங்கர்,துணைச் செயலர் விடுதலை சேகர்,இளைஞரணி நிர்வாகிகள் தமிழ்செல்வன், சீதா, பரணி, செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com