ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி தொடக்கம்

கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 60 கன அடி தண்ணீர் அனுப்பும் பணி புதன்கிழமை காலை முதல் தொடங்கியது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:56 am

DIN

கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 60 கன அடி தண்ணீர் அனுப்பும் பணி புதன்கிழமை காலை முதல் தொடங்கியது.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமான வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வீதமும், நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழைநீர் விநாடிக்கு 589 கன அடி வீதமும் என 5 நாள்கள் வந்தன. இதன் காரணமாக நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்த்து.
ஏரியின் மொத்தக் கொள்ளளவான 47.50 அடியில், தற்போது 45.10 அடியாக  உள்ளது. வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்படவில்லை.
கல்லணையிலிருந்து திறக்கப்படும்  தண்ணீரின் ஒரு பகுதி கொள்ளிடம் ஆற்றின் வழியாக தஞ்சை மாவட்டம் கீழணையில் தேக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் வடவாறு  வழியாக வீராணம் ஏரிக்கு அக்டோபர் மாதம் 26 -ஆம் தேதி திறக்கப்பட்டு  வந்தடைந்து. ஏற்கெனவே தேக்கப்பட்ட தண்ணீரும், தற்போதைய மழைநீரும் சேர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்தியது.
தற்போது பெய்த மழையியால் விவசாயத்துக்குத் தண்ணீர் தேவையில்லாததால், சென்னைக்குக் குடிநீருக்காக புதன்கிழமை காலை 8 மணிக்கு சேத்தியாதோப்பு அருகே உள்ள பூதங்குடியில் நீர்வாங்கி நெடும்மாடம்  என்ற இடத்திருந்து நீறேற்றும் நிலையம் வாயிலாக விநாடிக்கு 60 கன அடி வீதம்  தண்ணீர் அனுப்பும் பணியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தொடங்கினார்.
கடந்த பிப்ரவரி மாதம் வீராணம் ஏரி நீரின்றி வறண்டதால், சென்னைக்குக் குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, வீராணம் ஏரி நிரம்பியதால், குடிநீர் அனுப்பும் பணி புதன்கிழமை முதல் மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.