அரசர் முத்தையவேள் ஆய்வரங்கம் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை சார்பில், அரசர் முத்தையவேள் ஆய்வரங்கத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை சார்பில், அரசர் முத்தையவேள் ஆய்வரங்கத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், திரைப்படப் பாடலாசிரியர் விவேக் வேல்முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் மாணவர்களின் தனித் திறன்களை மேம்படுத்துவதற்காக அரசர் முத்தையவேள் ஆய்வரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்க விழா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் செ.மணியன் தலைமையில் நடைபெற்றது. பல்கலை. பதிவாளர் க.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இந்திய மொழிப்புல முதன்மையர் வீ.திருவள்ளுவன் ஆய்வரங்க நோக்க உரையாற்றினார். விழாவில், சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினரும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் எம்.உமாமகேஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசினர். விழாவில், திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் விவேக் வேல்முருகன் பங்கேற்று தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மாணவர்கள் மனித நேயமும் தன்னம்பிக்கையும் உடையவர்களாக வளர வேண்டும். மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். தொடர் முயற்சிகளின் மூலம் தனக்கான வெற்றி இலக்கை அடைய முடியம். வெற்றி இலக்கை தொடும் இறுதி நொடி வரை அதற்காக உழைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, தமிழியல் துறைத் தலைவர் அரங்க.பாரி வரவேற்றார். முத்தையவேள் ஆய்வரங்கின் அமைப்பாளர் ஜா.ராஜா நன்றி கூறினார். கல்வியியல் புல முதல்வர் பாபு, கல்வித் திட்ட இயக்குநர் கே.மணிவண்ணன், முன்னாள் தமிழியல் துறைத் தலைவர் ப.ஞானம், வரலாற்றுத் துறைத் தலைவர் ரூபாவதி, இந்தி மொழித் துறைத் தலைவர் தில்லைச்செல்வி, உடற்கல்வித் துறைத் தலைவர் சுதன் பால்ராஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...