விபத்தில் இறந்த கால்நடை மருத்துவர் குடும்பத்துக்கு ரூ. 34 லட்சம் இழப்பீடு
விபத்தில் இறந்த கால்நடை மருத்துவர் குடும்பத்துக்கு ரூ. 33.89 லட்சம் இழப்பீடாக வழங்க கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


விபத்தில் இறந்த கால்நடை மருத்துவர் குடும்பத்துக்கு ரூ. 33.89 லட்சம் இழப்பீடாக வழங்க கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆதி.சந்திரசேகரன் (55). இவர், மணலூர்பேட்டை அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 27.2.2010 அன்று சந்தைப்பேட்டை புறவழிச் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அந்த வழியாகச் சென்று தனியார் வேன் மோதியதில் நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
எனவே, பாதிக்கப்பட்ட சந்திரசேகரன் குடும்பத்தினர் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை கோரி, கடந்த 2013 -ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை நீதிபதி திலகவதி கோவிந்தராஜ் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பாதிக்கப்பட்ட சந்திரசேகரன் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ. 33,89,455 இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்தத் தொகையை மனு தாக்கல் செய்த நாளிலிருந்து வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...