கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை கிராம மக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த கிராமம் கடலூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். இந்தப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால் மாணவர்கள் மாவட்ட அளவிலான பொது அறிவு, ஆங்கிலப் பேச்சு, ஓவியப் போட்டிகளில் முதலிடம் பிடித்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் தனியார் பள்ளிகள் போல இந்தப் பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்துதர முயற்சி மேற்கொண்டனர்.
இதற்காக, இந்தப் பள்ளியில் படித்து அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ரூ.2 லட்சம் வரை நிதி உதவி பெற்று, பள்ளிக்குத் தேவையான கணினி, மேஜைகள், பீரோக்கள், மின் விசிறிகள், விளையாட்டு உபகரணங்கள், நூல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை வாங்கினர்.
இந்தப் பொருள்களை பள்ளிக்கு வழங்கும் நிகழ்வை, "ஊர் கூடி கல்விச் சீர் வழங்கும்' விழாவாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மேளதாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் இந்தப் பொருள்களை சுமந்து ஊர்வலமாகச் சென்று பள்ளிக்கு வழங்கினர். விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சித்ரா தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சத்தியசீலன், அஜய், அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ நாக.முருகுமாறன், சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். விழாவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலமுருகன், தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஜெயக்குமார் ஜான்சன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செல்வி மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆசிரியை சரண்யா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’-என்பதுதான் எங்கள் வழி! - உதயநிதி ஸ்டாலின்
கேரளத்தில் ஆட்சி அமைக்க வி.டி. சதீசனுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் அர்லேகர்!
எலக்ஷனாலும் கரெக்ஷனாலும் மக்கள்தான்; அப்டேட் ஆகி மீண்டும் வருவோம்! - மு.க. ஸ்டாலின்

பதற்றமாக இருந்தேன்; சதம் விளாசிய பிறகு விராட் கோலி பேசியதென்ன?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
