ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

சிதம்பரம் நகராட்சியில் ரூ.3.50 கோடி முறைகேடு: உதவிப் பொறியாளர்கள் 5 பேர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தில், ரூ.3.50 கோடி வரை முறைகேடு செய்ததாக,

Published On :

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தில், ரூ.3.50 கோடி வரை முறைகேடு செய்ததாக, குடிநீர் வழங்கல் துறை உதவிப் பொறியாளர்கள் 5 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.7.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்தப் பணிகள் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் மூலமாக செயல்படுத்தப்பட்டன. சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இந்தப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து, 2012 முதல் 2017-ஆம் ஆண்டு வரை மேற்கொண்டது. ஆனால், இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு புகார்கள் வரப்பெற்றன.
 இதையடுத்து, இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர் மு.சதீஷ் விசாரணை மேற்கொண்டார்.
 இதில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் உதவிப் பொறியாளர்கள் சி.காசிநாதன், பி.விஜயலெட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் பி.விஜயகுமார், எம்.பாண்டியன், சி.அசோகன் மற்றும் சென்னையைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தார் ஆகிய 6 பேர் மீது கடந்த 1-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் தரப்பில் தெரிவித்ததாவது: ரூ.7.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியில் ரூ.3.50 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக, நகராட்சியிலுள்ள வீடுகளுக்கு குடிநீர் கணக்கீட்டு கருவியுடன் புதிய இணைப்பு வழங்கிட ரூ.1.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
 ஆனால், புதிய இணைப்புகள் முறையாக வழங்கப்படாமல் ஏற்கெனவே இணைப்பு பெற்றிருந்த 5,300 வீடுகளையும் புதிய இணைப்பு பெற்றுள்ளதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. கனகசபை நகர், பேருந்து நிலையத்திலுள்ள நீரேற்று நிலையத்தில் குடிநீர் அளவீட்டு கருவியை காப்பரில் பொருத்த ரூ.11.49 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தக் கருவி பொருத்தப்படாமல் பிளாஸ்டிக் பொருள்களை பொருத்தி கணக்கு காட்டப்பட்டுள்ளது.
 மேலும், குடிநீர் விநியோகத்துக்கான குழாய்கள் உள்ளிட்ட உதிரி பாகங்கள் வாங்கிய வகையில் ரூ.1.36 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.