சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அரசியல் கட்சியினர், வணிகர்கள் அமைதி ஊர்வலம்

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, பண்ருட்டி, மந்தாரக்குப்பம் பகுதிகளில் அமைதி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி, பண்ருட்டி, மந்தாரக்குப்பம் பகுதிகளில் அமைதி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டியில் அனைத்து வணிகர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், காந்தி சாலையில் உள்ள பெருமாள் கோயிலில் இருந்து அமைதி ஊர்வலம்  புறப்பட்டது. 
ஊர்வலத்தில் பண்ருட்டி தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம், செயலர் வி.வீரப்பன், பண்ருட்டி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயல் செயலர் ராஜா, முந்திரி வியாபாரிகள் சங்கச் செயலர் ராமகிருஷ்ணன், தொழிலதிபர் 
டி.கே.ஏ.கார்த்தி, உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மோகன், அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர் ரகு, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று, நான்கு முனை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோல, பண்ருட்டி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் சிவக்கொழுந்து தலைமையில், அனைத்துக் கட்சியினர் நான்கு முனை சந்திப்பில்  வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மந்தாரக்குப்பத்தில் அனைத்து வணிகர்கள், அரசியல் கட்சியினர் பெரியாகுறிச்சியில் இருந்து மெளன ஊர்வலம் சென்று பழைய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
நெய்வேலி ஏ-பிளாக் மாற்றுக் குடியிருப்பு மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அமைதி ஊர்வலமாக நேரு சிலை, ஆர்ச் கேட், இந்திரா நகர் வழியாகச் சென்றனர். தொடர்ந்து, கருணாநிதி படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.