கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

காட்டுமன்னார்கோவில் அருகே உடையும் நிலையில் வடவாற்றின் கரைகள்

காட்டுமன்னார்கோவிலை அடுத்த குறுங்குடி கிராமம் அருகே வடவாறு ஆற்றங்கரை உடையும் நிலையில் உள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

காட்டுமன்னார்கோவிலை அடுத்த குறுங்குடி கிராமம் அருகே வடவாறு ஆற்றங்கரை உடையும் நிலையில் உள்ளது.
 காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாகத் தண்ணீர் வருகிறது. இந்த நீரைக் கொண்டு வடவாற்றின் கரையோர கிராம விவசாயிகள், வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் பயிர் செய்து வருகின்றனர்.
 கடந்த 1996- ஆம் ஆண்டு புதிய வீராணம் திட்டத்தின் கீழ் வடவாற்றில் 22 கி.மீ. தொலைவு வரை இரு கரைகளில் சிலாப்புகள் அமைக்கப்பட்டு, அடித்தளப் பகுதி சீரமைக்கப்பட்டது.
 இதனால், கீழணையில் தண்ணீர் திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் வீராணம் ஏரிக்குத் தண்ணீர் வந்துவிடும். கடந்த 20 ஆண்டுகளாக வடவாற்றின் கரையைப் பராமரிக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, செப்பனிடும் பணி தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
 நிகழாண்டு ஜூன் மாதம் அவசர கதியில் குறுங்குடி அருகே கரைகளைச் செப்பனிடும் பணி நடைபெற்றது. அப்போது, வடவாற்றின் இரு கரைகளிலும் சேதமடைந்த கான்கிரீட் சிலாப்புகள் மாற்றியமைக்கப்பட்டன. ஆனால், இந்தப் பணி சரிவர நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
 எனினும், புதிதாக அமைக்கப்பட்ட கரைகளில் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், வீராணம் ஏரியில் தண்ணீர் தேங்கியதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் மண்ணை அள்ளிப் போட்டு நிரப்பிய கரைகள் உள்வாங்கப்பட்டு, உடையும் அபாயத்தில் உள்ளது.
 ஏரியில் தேக்கப்பட்ட நீர் குறுங்குடி கிராமம் வரை வடவாற்றில் தேங்குவதால், ஆற்றின் இரு கரைகளைத் தொட்டு கொண்டு நீர் உள்ளது. இதனால், புதிதாக அமைக்கப்பட்ட கரைகள் உடைந்துள்ளன.
 மேலும், பலத்த மழை பெய்தால் சேதமடைந்த கரைகள் உடைந்து வீராணம் ஏரி நீர், வடவாற்றின் நீர், மழை நீர் ஆகியவை காட்டுமன்னார்கோவில் நகர்ப் பகுதி முழுவதும் பரவும் ஆபாயம் உள்ளது.
 எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக வடவாற்றின் கரைகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
 இதனிடையே, கடந்த 5 நாள்களுக்கு முன்பு குறுங்குடி கிராமத்தில் காத்தாயி அம்மன் கோயில் அருகே வடவாற்றின் கரை உள்வாங்கியதால், 70 ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து, பொதுப் பணி துறையினர், அந்தப் பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி கரையைப் பலப்படுத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.