கடலூர் மண்டல மறுமலர்ச்சி திமுக மாணவரணி சார்பில் பெரியார், அண்ணா குறித்த மண்டல அளவிலான பேச்சுப்போட்டி கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டிக்கு மண்டல பொறுப்பாளர் இராச.எழிலன் தலைமை வகித்தார். இந்தப் போட்டியில், கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள், புதுவை மாநிலத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற தலா 3 பேர் வீதம் மொத்தம் 18 பேர் பங்கேற்றனர்.
மாவட்டச் செயலர்கள் ஜெ.ராமலிங்கம் (கடலூர் வடக்கு), ஏ.என்.குணசேகரன் (கடலூர் தெற்கு), வீ.பாபுகோவிந்தராஜ் (விழுப்புரம் வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் துணைப் பொதுச் செயலர் ஏ.கே.மணி பேச்சுப் போட்டியை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வீதம் பரிசாக வழங்கப்பட்டது. பரிசுகளை அரசியல் ஆய்வு மைய செயலர் மு.செந்திலதிபனும், நடுவர்களுக்கான பரிசை கழக அமைப்புச் செயலர் ஆ.வந்தியத்தேவனும் வழங்கி சிறப்புரையாற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்ரைன் துறைமுகத்தில் 4 இந்தியர்களுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்!
இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிக்கும் கமல் ஹாசன்?

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்க அன்புமணி வலியுறுத்தல்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke


