குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

முக்களத்தியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்

திட்டக்குடியில் அமைந்துள்ள முக்களத்தியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

திட்டக்குடியில் அமைந்துள்ள முக்களத்தியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 திட்டக்குடி மேல வீதியில் முக்களத்தியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நடைபெறும் பல்வேறு உற்சவங்களைத் தொடர்ந்து, அம்மனுக்கு தேரோட்டம் நடத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
 இதையடுத்து, கோயிலுக்கு திருத்தேர் செய்ய முடிவெடுக்கப்பட்டு, பல்வேறு உபயதாரர்கள் மூலமாக ரூ. 15 லட்சத்தில் மரத்தால் ஆன தேர் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணி முழுமைப் பெற்றதைத் தொடர்ந்து, புதன்கிழமை தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
 முன்னதாக, ஆகஸ்ட் 21 -ஆம் செவ்வாய்க்கிழமை காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, புதன்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.