தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர், கடலூரில் செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரகத்தில்

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர், கடலூரில் செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் விஏஓக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். சொத்து உள்பிரிவு தொடர்பான சான்றிதழ்களில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கூடுதல் கிராமங்களை கவனிப்பதற்கு கூடுதலாக பொறுப்பூதியம் வழங்க வேண்டும். கணினி வசதிகளை பயனுள்ள வகையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 10-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 7-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தது.
இதையொட்டி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செவ்வாய்க்கிழமை பேரணியாகச் சென்றனர். பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.ரவி தலைமையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.