இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 19-ஆவது பண்ருட்டி வட்ட மாநாடு, பண்ருட்டி கட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அந்தக் கட்சியின் பண்ருட்டி வட்டச் செயலர் பி.துரை தலைமை வகித்தார். வட்டக் குழு உறுப்பினர் ஜி.முருகன், வி.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலர் வி.குளோப், நிர்வாகக் குழு உறுப்பினர் வி.பி.முருகையன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மதியழகன், வட்டக் குழு உறுப்பினர் கே.ராமச்சந்திரன், ஆர்.பார்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த.மணிவாசகம் சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில், பண்ருட்டி ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் நகரச் செயலர் ஆர்.ஜோதி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.