நெய்வேலியில் விமான நிலையப் பணிகள் மந்தம்
நெய்வேலியில் விமான நிலைய கட்டுமானப் பணிகள் மந்த கதியில் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.


நெய்வேலியில் விமான நிலைய கட்டுமானப் பணிகள் மந்த கதியில் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.
மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு அக்.21-ஆம் தேதி தேசிய சிவில் விமான போக்குவரத்துக் கொள்கையை வெளியிட்டது. அதன்படி மண்டலங்களுக்குள் விமான போக்குவரத்து சேவையை எளிமையாக்க முடிவு செய்யப்பட்டது.
இதில், குறைந்தக் கட்டணத்தில் எளிய மக்களும் விமானப் பயணம் மேற்கொள்ள, விமான போக்குவரத்து இணைப்புத் திட்டத்தை (உதான்) தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நெய்வேலி, சேலம், ஓசூர் பகுதிகளில் இருந்து விமான சேவையை தொடங்க மத்திய அரசுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நெய்வேலியில் 1987-ஆம் ஆண்டில் வாயுதூத் விமான சேவை தொடங்கப்பட்டு இயங்கி வந்த நிலையில், சில காலத்திலேயே அந்தச் சேவை நிறுத்தப்பட்டது. வாயுதூத் விமான சேவைக்காக அமைக்கப்பட்ட ஓடுதளம் மட்டும் பராமரிக்கப்பட்டு வந்தது.
தற்போது, உதான் திட்டத்தின் கீழ் நெய்வேலியில் இருந்து விமான சேவை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், பழைய விமான ஓடு தள மேம்பாட்டுப் பணிகளையும், விமான நிலையம் அமைக்கும் பணிகளையும் ரூ.40 கோடி செலவில் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் 1,200 மீட்டர் ஓடுதளம், சுற்றுச்சுவர், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதமே விமான சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...