டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்தினமணி செய்தி எதிரொலி 

தினமணி செய்தியின் எதிரொலியைத் தொடர்ந்து, பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:58 am

தினமணி

தினமணி செய்தியின் எதிரொலியைத் தொடர்ந்து, பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 பண்ருட்டி பேருந்து நிலையத்தில், கடலூர் பேருந்துகள் நிறுத்துமிடத்தில் இலவசக் கழிப்பறை உள்ளது. இந்தக் கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழியின்றி அங்கேயே தேங்கி நின்று சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியது. இதனால், அந்தப் பகுதியில் கடை வைத்துள்ளவர்கள், பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
 இந்த நிலையில், கழிவு நீரை வெளியேற்ற சிமென்ட் காங்கிரீட் தரையை உடைத்துத் தரும்படி, நகர நிர்வாகம் கடை உரிமையாளர்களிடம் கூறியது. அதன்படி, கடை உரிமையாளர்கள் சிமென்ட் தரையை உடைத்துத் தந்தனர். ஆனால், பல நாள்கள் ஆகியும் கால்வாய் அமைத்துத் தராததால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கடந்த வாரம் தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாகப் பேருந்து நிலையத்தில் தற்போது கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.