கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலேஸ்வரர் கோயிலில் இந்து மக்கள் கட்சியினர் விளக்கேற்றி ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் இந்துக் கோயில்களில் பக்தர்கள் விளக்கேற்றுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் நகரத் தலைவர் அன்பு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா வரவேற்றார். மாநில பொதுச் செயலர் செந்தில், மாநிலச் செயலர் மணிகண்டன், புதுவை மாநிலத் தலைவர் மஞ்சினி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக
பங்கேற்று பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







