குறைதீர் கூட்டத்தில் நல உதவி

கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் , மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

கடலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் , மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் தனிநபர், பொதுப் பிரச்னைகள் தொடர்பாக 306 மனுக்கள் அளிக்கப்பட்டன. பெறப்பட்ட மனுக்களை தீர ஆராய்ந்தும், விதிமுறைகளுக்குள்பட்டும், துரிதமாக நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டுமென அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளை 8 பயனாளிகளுக்கு தலா ரூ.5,220 மதிப்பிலும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.4910 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆர்.பானுகோபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நடராஜன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com