குழந்தைகளுடன் மாற்றுத் திறனாளி பெண் தற்கொலை முயற்சி
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி பெண் தனது குழந்தைகளுடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி பெண் தனது குழந்தைகளுடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ். தேவி (35). மாற்றுத் திறனாளியான இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் பிறந்த பிறகு தேவியின் கணவர் அவரை விட்டு விலகிச் சென்றுவிட்டாராம். இதனால் தேவி குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அவரது தாய் நடத்தி வரும் மளிகைக் கடை மூலம் குடும்பம் நடத்தி வருகிறார்.
அரசின் மாதாந்திர உதவித் தொகை ரூ.ஆயிரம் பெற்று வரும் நிலையில், தனக்கு நிலையான வருமானம் வரும் வகையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென கடந்த 6 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடமும், சட்டப் பேரவை உறுப்பினரிடமும் மனு அளித்து வருகிறாராம்.
இதில், சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்த நிலையில் நேர்முகத் தேர்வாளர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம் பெற்றிருந்ததாம். ஆனால், நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் வரவில்லையாம். ஆனாலும், நேர்முகத் தேர்வுக்கு சென்றபோது, கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லையாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆகியோரிடம் தெரிவித்தபோது, பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் விரக்தியுற்ற தேவி, திங்கள்கிழமை கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் தனது இரு மகள்களுடன் பங்கேற்றார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, தேவி தனக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என முழக்கமிட்டபடி தனது கையில் வைத்திருந்த புட்டியிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், தனது கோரிக்கை அடங்கிய மனுவை ஆட்சியரிடம் தேவி
அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...