பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திமுகவினர் கோஷ்டி மோதல்: போலீஸார் வழக்கு

பண்ருட்டியில் திமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக இருதரப்பினர் மீதும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.

News image
Updated On :5 ஜூன் 2018, 3:08 am

DIN

பண்ருட்டியில் திமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக இருதரப்பினர் மீதும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.
பண்ருட்டி நகர திமுகவினர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது, சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ தரப்பினருக்கும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 
இதுதொடர்பாக முன்னாள் கவுன்சிலர் சிவா அளித்த புகாரின் பேரில் நகரச் செயலர் ராஜேந்திரன் மீதும், நகரச் செயலர் ராஜேந்திரனின் கார் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், முன்னாள் கவுன்சிலர்கள் சிவா, சோழன் மற்றும் குணா, தேவராஜ் உள்ளிட்ட சிலர் மீதும் பண்ருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து 
வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.