ஜெயப்பிரியா கல்விக் குழுமத்தால் விருத்தாசலத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, வேப்பூர் வட்டம், திருப்பயர் கிராமத்தில் ஜெயப்பிரியா மெகா சிட்டியில் "ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி" என்ற பெயரில் புதிய பள்ளி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரியா குழுமத்தின் நிறுவனத் தலைவர் சி.இராசகோபாலன் தலைமை வகித்தார். ஜெயப்பிரியா கல்விக் குழுமங்களின் தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் முன்னிலை வகித்தார். ஜெயப்பிரியா கல்வி அறக்கட்டளையின் இயக்குநர்கள் கஸ்தூரி இராசகோபாலன், அனிதாஜெயசங்கர், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்கள் சங்கரய்யா, ஸ்ரீலதா, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஏ.முருகன், நிர்வாக அலுவலர் சேதுராமன், மக்கள்-தொடர்பு அலுவலர் ஞானப்பிரகாசம், விருத்தாசலம் நேஷனல் எஸ்டேட் உரிமையாளர் நாகூர்கனி, கட்டட ஆலோசகர் கோவிந்தராஜ், பள்ளிக் கட்டட ஒப்பந்ததாரர் சேகர், வேப்பூர் வட்டாட்சியர் எம்.செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ரவிக்குமார், பிரசாத், ஜெயப்பிரியா சிட்பண்ட் நிறுவனத்தின் பொதுமேலாளர் சந்திரமோகன், துணைப் பொது மேலாளர்கள் அசோகன் சேகர், வள்ளிமணாளன், கோட்ட மேலாளர் ஏ.பி. சரவணன், ஜெயப்பிரியா பிராப்பர்டி மேலாளர் ரவி, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். முன்னதாக, பள்ளி முதல்வர் வி.ரேவதி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் மாலதி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.