காட்டுமன்னார்கோவிலில் இயங்கி வரும் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 26 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
இந்தப் பள்ளியில் இருந்து 34 மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இவர்களில் 26 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி எஸ்.சந்தியா 300 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார்.
இதையடுத்து, பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் நிறுவனர் ஜி.குமாரராஜா, நிர்வாக இயக்குநர் ஜி.கே.அருண், பள்ளி முதல்வர்கள் பார்த்திபன், பக்தவச்சலம், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









